கரூர் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
செல்லாண்டியம்மன் கோவில் கும்பா பிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம், புகழூர் தாலுகா வேட்டமங்கலம் கிராமம் நொய்யலில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், கருப்பண்ணசாமி உள்பட பல்வேறு பரிவார தெய்வங்களும் உள்ளன. இங்கு கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து தற்போது கோவில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேகம் கடந்த மாதம் 31-ந்தேதி மங்கள் கணபதி யாகத்துடன் தொடங்கியது. காலையில் சேமங்கி காவிரி ஆற்றில் இருந்து 18 பட்டி கிராமங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் 5. தீர்த்த குடங்களில் புனிதநீர் எடுத்து கொண்டு வாத்தியங்கள் முழங்ககுதிரைகள் ஓட்டகங்கள் போன்றவற்றில் ஊர்வல வந்தனர்.
மாலையில் விநாயகர் வழிபாடு தீபாராதனை நடந்தது. கடந்த 1-ந்தேதி காலையில் - மங்கள இசை, சிறப்பு அபிஷேகங்கள், மாலையில் தீப வழி பாடு, விநாயகர் வழிபாடு. முதல் கால பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. மறுநாள் காலையில் அனைத்து கோபுரத்திற்கும் கலசம் வைத்தல், கண் திறப்பு, எண் வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 2-ம் கால பூஜை, 3-ம்கால பூஜை உள்பட பல்வேறு பூஜை மற்றும் ஆயத்தீர்வைத்துத்கள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் நான்காம் கால யாக பூஜை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்தனர். பின்னர் செல்லாண்டியம்மன் கோவில் புனவில் கோபுர கலசத்தில் ஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து செல்லாண்டியம்மன் பரிவார தெய்வங்களுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மின்சாரம், துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, உயர் நீதிமன்ற நீதிபதி தனபால், ரெயில்வே திரு சேருப்பிரண்டு எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ. மாணிக்கம். ஸ்ரீமத போகர் பழனி ஆதினம் சிவானந்தா சுவாமிகள். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜய பாஸ்கர், பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. வடிவேல், புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், அறநிலையத்துறை இணை ஆணையர் பாண்டி பின் அவர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வளர்மதி கரூர் மேற்கு ஒன்றிய அ.தி மு.க. கமலக்கண்ணன் முன் செயலாளர் ருவண சேகர், பல்வேறு துறைஅதிகாரிகள், கட்சி சோந்த பொறுப்பாளர்கள் நாமக்கல், கரூர், திண்டுக்கல், சேலம், மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், குடிப்பாட்டு மக்கள் கலந்து கொண்டு தரிசனம்செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. கும்பா பிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் சிறப்பாக செய்து முடித்தனர்.