திருச்சி விமான நிலையத்தில் 20 அடி உயரத்திற்கு பிரமாண்ட சுற்றுசுவர் கட்டப்படுகிறது
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 20 அடி உயரத்தில் ரூ.18 கோடியில் மிக பிரமாண்டமான சுற்றுச்சுவர் அமைக்கப்பட இருப்பதால் எல்லை நிர்ணயிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் மற்றும் தாய்லாந்து, வியட்நாம் ஆகிய வெளிநாடுகளுக்கும், சென்னை.ஐதராபாத். மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை உள்ளது. சுமார் 100 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் புறப்பாடுறது 3,500 பயணிகளையும், பகுதியில் 2,500 பயணிகளையும் கையாள முடியும் என்றாலும் கடந்த பொங்கல் பண்டிகை நேரத்தில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பயணிகளை கையாண்டுபுதிய சாதனை படைத்து உள்ளது திருச்சி விமான நிலையம்.
நிலம் கையகப்படுத்தும் பணி திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2-ந் தேதி பிரதமர் மோடி சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளு டன் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைத்தார். அப்போது திருச்சி விமான நிலையத்தின் ஓடு பாதை (ரன்வே) விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தாமல் மாநில அரசு 14 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு இருப்பதால் நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவாக முடித்து கொடுக்கும் படி பிரதமர் மோடி விழாவில் பங்கேற்ற தமிழக முதல் -அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
இதனைதொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் பணியானது மாநில அரசின் சார்பில் விரைவு படுத்தப்பட்டது. விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்கு தேவை யான 512 ஏக்கர் நிலத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலம் தவிர மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த நிலத்தில் 255 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது, விமான நிலைய ஆணையம் கேட்டுக்கொண்டதில் 97சதவீதம் நிலம் மாநில அரசால் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் விமான ஓடுபாதையின் நீளத்தை நீட்டிக்கும் பணியை விரைவாக தொடங்க இருக்கிறது.
ஓடுபாதையின் நீளம் தற்போது 8.136 அடியாக உள்ளது. இதனை 12.500 அடியாக நீட்டிக்க வேண்டும் என்பது தான் விமான நிலைய ஆணையத்தின் திட்டம் ஆகும். 12,500 அடியாக ஓடுபாதை நீட்டிக்கப்பட்டால் அது தமிழகத்தின் இரண்டாவது பெரிய ஓடுபாதையாகவும், இந்திய அளவில் ஐந்தாவது பெரிய ஓடுபாதையாகவும் இருக்கும்
ஓடுபாதை நீட்டிப்பிற்கு பின்னர் திருச்சி விமான நிலையத்தில் பெரிய அளவிலான போயிங்'ரக விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் எளிதாக இறங்கமுடியும். இதன் மூலம் திருச்சியில் இருந்தே வெளிநாடுகளுக்கு சரக்கு விமானங்கள் நேரடியாக புறப்பட்டு செல்ல முடியும் என்பதால் திருச்சி விமான நிலையத்தின் வருவாயும் மேலும் பலமடங்கு உயர வாய்ப்பு உள்ளது. 'மெகா' சுற்றுச்சுவர்
ஓடுபாதை நீட்டிப்பு பணியை தொடங்குவதற்கு முன்பாக நிலம் கையகப்படுத்ததப்பட்ட பகுதியில் சுமார் 20 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் 3 கட்டப்பட இருக்கிறது இதற்காக எல்லையை நிர்ணயம் செய்யும் பணியில் நிலம்" கையகப்படுத்தும் பிரிவு தனி தாசில்தார், நில அளவையர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக விமான நிலைய ஆணைய அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்ட போது 'திருச்சி மாவட்ட வருவாய்துறை அதிகாரிகளுடன் இணைந்து விமான நிலையத்தின் கிழக்கு பகுதி மற்றும் தெற்கு, வடக்கு பகுதிகளில் எல்லை நிர்ணயிக்கும் பணியை செய்து வருகிறோம். இந்த பணியானது நிறைவடையும் நிலையில் உள்ளது. இது முடிந்த உடன் ரூ.18 கோடியில் 'மெகா' சுற்றுச்சுவர் கட்டுவதற்கான டெண்டாகோரப்படும்.சுற்றுச்சுவர் கட்டுமான பணி முடிவடைந்ததும் ஓடுபாதை நீட்டிப்பு செய்யும் பணியும் உடனடியாக தொடங்கும்' என்றனர்.