நெல்லின் ஈரப்பத அளவை அதிகரித்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 800 எக்டேரில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் சம்பா, தாளடி சாகுபடி 1 லட்சத்து 43 ஆயிரத்து 985 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. பெய்த மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவால் அறுவடை பணிகள் தேக்கமடைந்தது. குறிப்பாக அறுவடை செய்த நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. ஈரபத
அளவு 17 சதவீதம் என்பதை 22 சதவீதமாக உயர்த்த கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இந்தநிலையில் டெல்டா மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து அறிய மத்திய நிபுணர் குழு நேற்று முன் தினம் தஞ்சைக்கு வந்தது. இந்த குழு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தது. நேற்று இந்த குழுவினர் திருவாரூர் மாவட்டத்துக்கு வந்தனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பூவார்நத்தம் பகுதியில் உள்ள நெல்கொள் முதல் நிலையத்தில் கொள்முதலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நெல்லை மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்தது.
மத்திய உணவுத்துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த உதவி இயக்குநர் நவீன், தொழில்நுட்ப அலுவலர் ராகுல் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை, கலெக்டர் சாரு ஸ்ரீ ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
ஆய்வின் போது பருவம் தவறிய மழையினால் சம்பா அறுவடை பணிகள் தேக்கம் அடைந்துள்ளது. மிகவும் சிரமப்பட்டு நெற்பயிர்களை அறுவடை செய்து வருகிறோம்.
தற்போது பனிப்பொழிவு அதிகமாக நிலவி வருவதால், அறுவடை செய்த நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளன. மேக மூட்டம், மழைப் பொழிவும் உள்ளதால், நெல்லை உலர வைப்பதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. எனவே நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரித்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் மத்தியக்குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்
விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மத்தியக்குழுவினர் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சோனாப் பேட்டை, எடமேலையூர
பேட்டை செருமங்கலம், பைங்காநாடு, மற்றும் திருவாரூர் அருகே உள்ள தப்பளாம்புலியூர் ஆகிய இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து உரிய ஆய்வு செய்தனர்.
மத்தியக்குழுவினரிடம் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கலெக்டர் சாருஸ்ரீ விளக்கி கூறினார். அப்போது மத்தியக் குழுவினர் இதுவரை தமிழ்நாட்டில் 5 லட்சத்து 76 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கருத்துக்களை ஏற்று, மத்திய அரசின் அறிக்கை விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என கூறினர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில் தங்கள் வைத்த கோரிக்கை நிறைவேறினால் பல விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
Tags
tamilnadu