நாக்கை இரண்டாக பிளந்து அறுவை சிகிச்சை செய்த 2 வாலிபர்கள் கைது
திருச்சியில் மருத்துவக்கட்டுப்பாட்டை மீறி நாக்கு பிளவு அறுவை சிகிச்சை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பச்சை குத்தும் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் வயது 25 இவர் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தப்பார் பகுதியை ஜெயராமன் என்பவருடன் சேர்ந்து திருச்சி சத்திரம்பன் நிலையம் அருகே சிந்தாமணி பஜாரில் ஏலியன் எமோ டாட்டு என்கிற பெயரில் உடலில் பச்சை குத்தும் கடை நடத்தி வருகிறார். இங்கு வாடிக்கையாளர்களின் உடலில் வித்தியாசமாக டாட்டு வரைவது உள்ளிட்டவற்றை ஹரிஹரன் செய்து வந்தார்.
இதற்கிடையே ஏலியன் தோற்றத்தை உருவாக்குவது குறித்து அறிந்து கொண்ட அவர். இதற்காக கடந்த 7 மாதங்களுக்கு முன்புமும்பை சென்றார். அங்கு ஆறு லட்சம் பணத்தை செலவு செய்து தனது கண்களின் வெள்ளை நிறத்தை நீலமாக மாற்றினார். அவன் தனது நாக்கையும் அங்கு அறுவை சிகிச்சை செய்து இரண்டு பகுதிகளாக பிளந்து அதில் பச்சை குத்தியுள்ளார்.
இரண்டு நாக்குகளுடன் திருச்சி திரும்பிய ஹரி, தான் பிரபலம் ஆவதற்காக இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு 'டாட்டூ' என்ற பெயரில் ஊசி மூலம் கண்களின் வெள்ளை நிறத்தை மாற்றி கொள்வது, நாக்கை இரண்டாக மாற்றிக்கொள்வது. அதற்கு பச்சை குத்தி வர்ணம் தீட்டிக்கொள்வது போன்றவற்றை செய்து ஏலியன் தோற்றத்தை உருவாக்குவதாக கூறி, அதை அவர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தினார்.அத்துடன், தனது நண்பர் ஒருவருக்கும் கடந்த 9-ந்தேதி தனது கடையில் வைத்து உரிய பயிற்சி மற்றும் அனுமதியின்றி மருத்துவகட்டுப்பாட்டை மீறியதுடன் அவரின் நாக்கையும் அறுவை சிகிச்சை செய்து இரண்டு பகுதிகளாக பிளந்து, பச்சை குத்தி நிறத்தையும் மாற்றியுள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்து தனது சமூவலைதள பக்கத்தில் பதிவிட்டார்.மருத்துவ கட்டுப்பாட்டை மீறி இயற்கைக்கு புறம்பாக உடல் மாற்றகலாசாரம் என்ற பெயரில் மருத்துவம் படிக்காமலேயே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்பதால் இதைப்பார்த்த சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார், ஹரிஹரனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்த போது, அவர் நாக்கை பிளவுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்தது உறுதியானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹரிஹரன், ஜெயராமன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட அவருடையடாட்டூ கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.மேலும் அந்த வீடியோக்களை பார்த்து யாரும் இது போன்ற செயலில் ஈடுபட கூடாது இது சட்டத்திற்கு புறம்பான செயல் என்பதால் இளைஞர்கள் யாரும் இது போன்று செயல்களில் ஈடுபட்டால் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.