மூதாட்டியை கொன்று நகை கொள்ளை திருச்சியில் பரபரப்பு

 மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
மூதாட்டியை கொன்று நகை கொள்ளை திருச்சியில் பரபரப்பு

உடலை குப்பைத்தொட்டி அருகே வீசிய கொடூரம்

திருச்சியில் மூதாட்டியை கொன்று நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். அவரது உடலை குப்பைத்தொட்டி அருகே வீசி சென்ற கொடூரம் நடந்துள்ளது.

ரெயில்வே ஊழியரின் மனைவி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணி (வயது 72). ரெயில்வேயில் பணியாற்றி வந்த இவரது கணவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவரது ஓய்வூதிய பணத்தை வைத்து கல்யாணி வாழ்ந்து வந்தார். அவர் நேற்று முன்தினம் ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக மண்ணச்சநல்லூரில் கோட்டை பகுதிக்கு வந்ததாக தெரிகிறது. அதன்பிறகு இரவாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், வாளாடி ரெயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வரும் அவரது மகன் வனத்தான் (42) மற்றும் உறவினர்கள் கல்யாணியை பல்வேறு இடங் கனில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

மூதாட்டி பிணம்

இந்நிலையில் நேற்று மலைக்

கோட்டை பகுதியில் உள்ள சிங்காரத்தோப்பு சூப்பர்பஜாரில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் குப்பைத்தொட்டி அருகே சாக்குப்பையால் சுற்றப்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவர்பிணமாக கிடப்பதாக கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கல்யாணி என தெரியவந்தது.

நகைக்காக கொலை

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை திருச்சியில் பரபரப்பு

மேலும் கல்யாணி அணிந்து இருந்த தங்க மூக்குத்தி, தோடு ஆகியவை திருடப்பட்டு இருந்தது. அவரது உடலில் காயங்கள் இருந்தன. மூதாட்டியின் கைகளை நாய்கள் கடித்துக் குதறி இருந்தன. யாரோ மர்மநபர்கள் தங்க மூக்குத்தி, தோடு ஆகியவற்றுக்காக கல்யாணியை கொலை செய்து, அவரது உடலை சாக்குப்பையால் சுற்றி குப்பைத்தொட்டி அருகே வீசி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்கிடையே தகவல் அறிந்த கல்யாணியின் உறவினர்கள் திருச்சி வந்தனர் அவர்கள்,கல்யாணியின் உடலை பார்த்து கதறி அழுதது, அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

4 வாலிபர்களிடம் விசாரணை

இந்தசம்பவம் தொடர்பாக மலை

கோட்டை போலீசார், அப்ப குதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வாலிபர்களை சந்தேகத்தின் பேரில்பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தசம்பவம் தொடர்பாக கல்யாணியின் மகன் வனத் தான் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காகமூதாட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இது போன்ற குற்ற சம்பவங்கள் நிறைய நடப்பதால் பெண்கள் மற்றும் வயதானவர்கள் வெளியே செல்லும் போது பாதுகாப்பாக செல்லுமாறு போலீசார் கூறுகின்றனர்.

புதியது பழையவை

نموذج الاتصال