அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி
ரூ.72 லட்சம் மோசடி வழக்கில் தேடப்பட்ட கரூர் பெண் கைது
மேலும் நான்கு பேருக்கு வலைவீச்சு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சகணக்கில் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கரூரை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புகார்
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேலக்கூடலூரை சேர்ந்த முத்து முருகன் மகன் பிரபு (வயது 27). என்ஜினீயர். இவர் கடந்த ஆண்டு தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
நான் அரசு நவதலைக்குகள் ஊரைச் சேர்ந்த அனுமந்தன் மகன் சந்திரசேகரன் தமிழ்நாடு மின் வாரியத்தில் வயர்மேன் ஆக பணிபுரிந்து வருகிறார். அவர் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை பகுதியைச்சேர்ந்த ராய் மூர்த்தி மகன் குமார், கோவை சரவணக்குமார் மனைவி உஷாராணி, காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சீபுரம் அண்ணா நகரை சேர்ந்த ராமமூர்த்தி மகன் கவுரிசங்கர்க்கு அறிமுகம் ஆகியோர் எனக்கு ஆனார்கள். அவர்கள் தங்களுக்கு அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களை
தெரியும் என்றும், அவர்கள் மூலம் நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கித்தந்துள்ளதாகவும் கூறினர்.
ரூ.72 லட்சம் மோசடி
அவர்களை தேனி மாவட் டத்தின் பிற பகுதிகளை சேர்ந்த கார்த்திகேயன், பிரதீப்குமார். தினேஷ் குமார். ஆனந்த் ஆகியோருக்கும் சந்திரசேகரன் அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர் வேலைவாங்கித்தருவதாக கூறினர். அதை நம்பி, குமாரன் மனைவி பூமகள் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.13 லட்சமும், கவுரிசங்கரிடம் ரொக்கமாக ரூ.6 லட்சத்து 75ஆயிரத்துமும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 75 ஆயிரம் கொடுத்தேன். அதன்பிறகு எனக்கு ஒரு பணி நியமன உத்தரவு கொடுத்தனர். ஆனால் அது
போலியான உத்தரவு என்று என்னைப் போல், கார்த்திகேயனிடம் ரூ.16 லட்சத்து 75 ஆயிரம், பிரதீப்குமாரிடம் ரூ.12 லட்சத்து 75 ஆயிரமும், தினேஷ்குமாரிடம் ரூ.11 லட்சமும், ஆனந்திடம் ரூ.12 லட்சமும் பெற்றுக்கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து விட்டனர். இதில் எங்கள் 5 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.72 லட்சத்து 25 ஆயிரம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
பெண் கைது
இந்த புகார் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில், குமார், பூமகள் (46), உஷாராணி, கவுரிசங்கர், சந்திரசேகரன் ஆகிய 5 பேர் மீதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பூமகளை, இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி தலைமையிலானபோலீசார் நேற்று கைது செய்தார். அந்த பெண்ணை கரூரில் இருந்து தேனிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர் உள்ளனர். பின்னர் அவரை தேனி ஜூடி சியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.