போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை போலீஸார் அதிரடி கைது

 போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்டுகள் தயாரித்து லட்சக்கணக்கில் விற்பனை
போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை போலீஸார் அதிரடி கைது

டிராவல்ஸ் ஏஜெண்டுகள் 6 பேர் கைது

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்டுகள் தயாரித்து லட்சக்கணக்கில் விற்பனை செய்த டிராவல்ஸ் ஏஜெண்டுகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை அதிகாரி புகார்

சென்னை விமான நிலைய  குடியுரிமை அதிகாரிபோலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் 

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலியான ஆவணங்கள் மூலம் சில டிராவல்ஸ் ஏஜெண்டுகள் பாஸ் போர்ட்டுகளை தயாரித்து வழங்கியுள்ளனர்.அந்த பாஸ் போர்ட்டிற்கு லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளனர். போலியான பெயர்கள், பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் பெற்றோர்களின் விவரங்கள் மூலம் போலியான ஆதார்கார்டுகள் பான் கார்டுகளை தயாரித்து, அவற்றின் மூலம் பாஸ்போர்ட்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி இதுபோன்ற பாஸ்போர்ட்டுகளை தயாரித்து லட்சக்கணக்கில் சம்பா |தித்த ஏஜெண்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை போலீஸார் அதிரடி கைது

இந்த புகார் மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசாருக்கு. போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவமணி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத் தினார்.


6 பேர் கைது


விசாரணை அடிப்படை யில், சதீஷ்குமார் (வயது 46) |கல்யாண் (40), நல்லாமுகமது (60), நாசர்அலி (47), பவுசல் ரகுமான் (29), குமார் (48) ஆகிய 16 டிராவல்ஸ் ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்ட னர். இவர்கள் சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களில் டிராவல்ஸ் நிறுவனங் களை நடத்தி வந்தவர்கள் ஆவார்கள்.


இவர்களிடம் இருந்து 54 பாஸ்போர்ட்டுகள். 2கணினிகள். ஒரு லேப்டாப் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பாஸ்போர்ட்டு கேட்டு விண்ணப்பித்த ஏராளமானோர்களின் பெயர் விவரம் அடங்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 54 , பாஸ்போர்ட்டுகளின் உண்மை தன்மை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் இவர்கள் தயாரித்து கொடுத்த போலி பாஸ்போர்ட் மூலம் யார் யார் எங்கு சென்றுள்ளனர் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு சம்பவம்

போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை போலீஸார் அதிரடி கைது

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டையை சேர்ந்தவர் ஷேக் மொய்தீன் (50). இவர் துபாய் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அவர்களது பாஸ்போர்ட்டை விமானநிலைய பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது date of birth மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதேபோல தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டை சேர்ந்த வெள்ளையம்மாள் (43) சிங்கப்பூர் செல்வதற்காக வந்திருந்தார். அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்த போது அவர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் இரண்டுபேரையும் விமான நிலைய போலீசில் விமான நிலைய அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவர்கள் மீது ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.


புதியது பழையவை

نموذج الاتصال