லிப்டில் தீ 6 பேர் பலி மருத்துவமனையில் பரபரப

 லிப்டில் தீ 6 பேர் பலி மருத்துவமனையில் பரபரப்பு
லிப்டில் தீ 6 பேர் பலி மருத்துவமனையில் பரபரப்பு


திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். லிப்டை உடைத்து உடல்களை மீட்டனர்.

ஆஸ்பத்திரியில் பயங்கர தீ திண்டுக்கல் நேருஜிநகர் திருச்சி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அருகே சிட்டி மருத்துவமனை என்ற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. தரைத்தளம் மற்றும் 4 மாடிகளை  கொண்டது இந்த ஆஸ்பத்திரிஆகும். தரைத்தளத்தில் வரவேற்பு அறை, முதல் தளத்தில் தீவிர சிகிச்சை பிரிவு, 2-வது தளத்தில் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் 3-வது தளத்தில் நோயாளிகள் வார்டு, 4-வது தளத்தில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் தங்கும் அறை இருக்கிறது. இந்த ஆஸ்பத்திரியில் நேற்றைய நிலவரப்படி சுமார் 45 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

கரும்புகை சூழ்ந்தது

இந்தநிலையில் நேற்று இரவு

9 மணி அளவில் ஆஸ்பத்திரி வரவேற்பு அறையில் நோயாளிகள் விவரம் பதிவு செய்யும் அறையில் திடீரென 'டமார்' என்ற சத்தம் கேட்டது.இதனையடுத்து அங்கு தீ விபத்து ஏற்பட்டது.

உடனே அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர் ஓடோடி சென்று கீழ்தளத்தில் இருந்த மின்சார சுவிட்சுகளை அணைத்தார். இதனையடுத்து சிறிதுநேரத்தில் தரைதளம் முழுவதும் எரிந்து முதல் தளத்துக்கு பரவியது.

அங்கிருந்த ஊழியர்கள் தீயை அணைக்கமுயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. கரும்புகை சூழ்ந்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. மருத்துவமனையின் 4 தளங்களுக்கும் புகைமூட்டம் பரவியது. இதனால் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் பதறி துடித்தனர். தங்களது உயிரை காப்பாற்றி கொள்ள அங்கும் இங்கும் ஓடினர்.

6 பேர் பலி

இதற்கிடையே தீ விபத்து

குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு படைவீடரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன ஆம்புலன்சு வாகனங்கள் அங்கு விரைந்தன. உயிர் தப்பிக்கநோயாளிகள் மற்றும் உறவினர்கள்,ஆஸ்பத்திரி ஊழியர்கள் லிப்ட் வழியாக கீழே இறங்க முயன்றனர். ஆனால் அவர்கள் லிட்டுக்குள் சிக்கி கொண்டனர். லிப்டை உடைத்து தீயணைப்பு படைவீரர்கள் அவர்களை மீட்டனர்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த கலெக்டர் பூங்கொடி, போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை முடுக்கி விட் டனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்றொரு சம்பவம்

லால்குடி அருகே முன்வி ரோதத்தில் தொழிலா ளியை அடித்துக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கூலி தொழிலாளி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காலசேரி ஊராட்சி ஜீவாநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் அஜித்குமார் (வயது 27).

இவர் பேவர் பிளாக் சாலை அமைக்கும் கூலி வேலை -செய்து வந்தார். இந்நிலையில், அஜித்குமாரும், அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (29) உள் பட 4பேர் திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து லால்குடி வரை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்காக வந்து இருந்தனர்.

முன்விரோதம்

இதற்காக அவர்கள், கடந்த 2 மாதங்களாக லால்குடியை அடுத்த ஆங்கரை அருகே கைலாஷ் கார்டன் பகுதியில் தற்காலிககூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் கடந்த தீபாவளி அன்று அஜித்குமார், சதீஷ் ஆகியோர் மது அருந்தியுள்ளனர்.அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ், அஜித்குமாரின் முகத்தில் கண்ணாடி பாட்டிலால் தாக்கினார். இது தொடர்பாக அவர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

அடித்துக்கொலை

லிப்டில் தீ 6 பேர் பலி மருத்துவமனையில் பரபரப்பு

இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, முன்விரோத பிரச்சினையில் மீண்டும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் அஜித்குமாரை இரும்புக் கம்பியால் தாக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்த அஜித்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார்.இன்ஸ்பெக்டர் முத்தையனே மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.

புதியது பழையவை

نموذج الاتصال