துப்பாக்கியை காட்டி மிரட்டியரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்
கொலைவழக்கில் ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் சுட்டுபிடித்தனர்.சரணடையாமல் கள்ளத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதால் போலீசார் இந்த அதிரடி நடவடிக் கையில் ஈடுபட்டனர்.
சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 5-வது தெருவில் வசித்து வந்தவர் அரி என்கிற அறிவழகன் (வயது 28), பிரபல ரவுடி ஆவார். சென்னை போலீசில் 'ஏ' பிரிவு ரவுடி பட்டியலில் இவரது பெயர் உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தி.மு.க. வட்ட செயலாளர் இடிமுரசு இளங்கோ கொலை வழக்கு கடந்த 2016-ம் ஆண்டு வியாசர் பாடி ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற அவரது உறவினர் பழனி கொலை வழக்கு, 2018-ம் ஆண்டு அவரது மற்றொரு உறவினர் திவாகர் கொலைவழக்கு ஆகிய 3 கொலை வழக்குகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மேல் உள்ளது. மீஞ்சூர், திருத்தணி போலீஸ் நிலையத்தில் இவர் மீது கொலைமுயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
புளியந்தோப்பு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற பழனி கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பின்னர், அறிவழகன் தனது இருப்பிடத்தை திருமுல்லைவாயில் செந்தில் நகர் காமராஜர் தெருவுக்கு மாற்றினார். இந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவு ஆனார்.அவருக்கு எதிராக நீதிமன்றம் 'பிடி வாரண்ட்' உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமாரின் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
'உன் மீது கோர்ட்டு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது. எனவே வெளியே வந்து சரணடைந்து விடு' என்று ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தினார்கள் ஆனால் அறிவழகன் அதற்கு செவி சாய்க்கவில்லை. தன்னை பிடிக்க முற்பட்டால் உங்களை சுட்டு விடுவேன் என்றுக்கூறி போலீசாரை நோக்கி கைத்துப்பாக்கியை காட்டி மிரட்ட ஆரம்பித்தார்.
அதேபோன்று தற்போது ரவுடி அறிவழகனின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, ஓசிங் ராஜா ஆகிய 2 பேரும் கடந்த செப்டம்பர் மாதம் போலீசாரின் என்சுவுண்ட்டருக்கு பலியாகினர். அதற்கு முன்பு கைதான கொலைவழக்கில் கைதான ரவுடி திருவேங்கடமும் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாழடை ந்த வீட்டில் பதுங்கல்
அறிவழகன் சில மாதங்கள் திருத்தணியிலும், சில மாதங்கள் ஆந்திராவிலும், சிலமாதங்கள் பீகாரிலும் என மாறி மாறி மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். மேலும் அவர், அவ்வப்போது சென்னை வந்து, ஓட்டேரி பனந்தோப்பு காலளி மைதானம் அருகே உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி நண்பர்களை சந்தித்துவிட்டு செல்வதையும் வழக்கமாக வைத்திருந்தார். இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
இந்த நிலையில் அறிவழகன். பீகாரில் இருந்து சென்னை வந்து இந்த பாழடைந்த கட்டிடத்தில் தங்கி இருந்துள்ளார். இதுபற்றி தகவலறிந்து ஓட்டேரி சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் மற்றொரு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன் போலீஸ்காரர்கள் சலீம், அந்தோணி ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீ சார் நேற்று அதிகாலை 5 மணியளவில் பாழடைந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர்.
விபரீதத்தை உணர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தற்காப்பு நடவடிக்கையாக சினிமா பாணியில் சட்டென்று தனது கைதுப்பாக்கியை எடுத்து அறிவழகனின் வலது முழங்காலைநோக்கி சுட்டார். துப்பாக்கியில் இருந்து சீறி பாய்ந்த தோட்டா அறிவழகனின் வலது காலை துளைத்தது. வலி தாங்க முடியாமல் கதறியபடி அறிவழகன் அங்கேயே சரிந்தார்.
நகர முடியாமல் வலியால் துடித்து கொண்டிருந்த அவரை போலீசார் கைது செய்தனர் அவர் வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 6கிலோ கஞ்சா மற்றும் பட்டன் கத்தியை போலீசார் கைப்பற்றினார்கள். காலில் குண்டிப்பட்டு காயமடைந்த அறிவழகன், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.