பேச மறுத்த காதலி வெடிமருந்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

 பேச மறுத்த காதலி வெடிமருந்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர்
பேச மறுத்த காதலி வெடிமருந்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

காதலி பேசமறுத்ததால் அவரது வீட்டின் முன்பு பாறைகளுக்கு வெடி வைக்கும் ஜெலட்டின் குச்சியை வயிற்றில் கட்டி வெடிக்க செய்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட பயங்கர சம்பவம் கர்நாடகாவில் அறங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் நாகமங்களா பகுதியை சேர்ந்தவர் ராமசந்துரு  லாரி டிரைவர். இவரும், அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சிறுமியை ராமசந்துரு தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர். தங்கள் மகளை ராமசந்துரு கடத்தி சென்றுவிட்டதாக போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராமசந்துருவை கைது செய்து சிறுமியை மீட்டனர். மேலும் ராமசந்துருவை போலீசார் சிறையில் அடைத்தனர்.

பேச மறுத்த காதலி வெடிமருந்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

ஆறு மாதங்கள் மண்டியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமசந்துரு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வெளியே வந்தார். அதன்பிறகும் அவர் காதலியான சிறுமியிடம் பேச முயன்றார். ஆனால், சிறுமியை அவரது பெற்றோர் மூளைச்சலவை செய்து ராமசந்துருவுடன் பழகுவதை நிறுத்திவிடும்படி கண்டித்திருந்தனர். இதனால், அந்த சிறுமி ராமசந்துருவு டன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் ராமசந்துரு மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் ராமசந்துரு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார். பின்னர் அவர், கல்குவாரியில் பாறைகளை தகர்க்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை எடுத்து கொண்டு தற்கொலை செய்யும் நோக்குடன் சிறுமியின் வீட்டின் முன்பு வந்துள்ளார். அவர் வெளியே வருமாறு அழைத்தும் சிறுமி வராததாலும், பேச மறுத்ததாலும் தனது திட்டப்படி ஜெலட்டின் குச்சிகளை வயிற்றில் கட்டி அதனை வெடிக்க செய்தார். இதில் வயிறு சிதறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து போலீசார், வயிறு சிதறி பிணமாக கிடந்த ராமசந்துருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வெடிப்பொருள் வெடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது,முதலில் அங்கிருந்த மக்கள் யாரோ வெடிகுண்டு வைத்து விட்டதாகவே நினைத்தனர்.

பேச மறுத்த காதலி வெடிமருந்தை வைத்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர்

அதன்பின்னர் தான் ஜெலட்டின் குச்சி வெடித்து வாலிபர் உயிரிழந்தது தெரியவந்தது. ராமசந்துருவுக்கு ஜெலட்டின் குச்சி வெடிப்பொருள் எப்படி கிடைத்தது ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலி பேசாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதியது பழையவை

نموذج الاتصال