நாமக்கல் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை
மருமகள் பிரிந்த சோகத்தில் மகன் தூக்கில் தொங்கியதால் பெற்றோரும் விபரீத முடிவு
நாமக்கல் அருகே திருமணமான 5 மாதத்தில் மனைவி கோபித்து கொண்டு தாயார் வீட் டுக்கு சென்றதால், சமையல் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனம் உடைந்த தொழிலாளியின் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்டனர்.
சமையல் தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வாழவந்தி அருந்ததியர் காலனியை காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55), பெயிண்டர். இவருடைய மனைவி பூங்கொடி (50). இவர்களுடைய ஒரே மகன் சுரேந்திரன் (27), சமையல் தொழிலாளி. இவருக்கும். நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடியை சேர்ந்த சினேகா என்பவருக்கும் கடந்த மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அனைவம்மகூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இதற்கிடையே தனி குடித்தனம் செல்ல வேண்டும் என கணவரை, சினேகா வற்புறுத்தி வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு "வந்தது.நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட செல்வராஜ், பூங்கொடி, சுரேந்திரன்.
மாமனார் மற்றும் மாமியார் அவர்களை சமாதானம் செய்து உள்ளனர். ஆனால் சமாதானம் ஆகாத, சினேகா கணவரிடம் கோபித்து கொண்டு, தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
3 பேர் தற்கொலை
இதனால் மனம் உடைந்த சுரேந்திரன். நேற்று முன்தினம் இரவு வீட்டின் மேற் கூரை இரும்பு குழாயில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோரும் மகன் இறந்ததுக்கம் தாங்காமல் மகன் உடல் அருகே அதே கம்பியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆகாஷ் ஜோஷியும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
குடும்ப தகராறு
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், குடும்பதகராறு காரணமாக 3 பேரும். தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்துச் 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதபரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு சம்பவம்
நெல்லை அருகே 10-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை
நெல்லை அருகே வன்னிக்கோனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். கூலி தொழிலாளி. இவருடைய மகள் மகாலட்சுமி (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். பள்ளியில் மாணவி மகாலட்சுமியை நன்றாக படிக்குமாறு ஆசிரியை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்தார். மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்ற மகாலட்சுமி திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.