சேலம் அருகே செல்போனால் ரயிலில் அடிபட்டு 2 மாணவர் பலி
மொபைல் கேம் விளையாட்டால் விபரீதம்
சேலம் அருகே, cellphone 'Game' விளையாடியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயிலில் அடிபட்டு, பள்ளி மாணவர்கள் 2பேர் பலியாகினர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன் பாளையத்தை சேர்ந்த குமார் மகன் தினேஷ், 16 வயது ரவிக்குமார் மகன் அரவிந்த், 16 வயது நண்பர்களான இருவரும், ஏத்தாப்பூர் அரசு மேல்நி லைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கின்றனர். இருவரும் நேற்று காலை, 11:40மணிக்கு, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.
அப்போது சேலத்தில் இருந்து விருதாசலம் நோக்கி சென்ற பயணியர் ரயில், இருவர் மீதும் மோதியது. இதில் தினேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்
படுகாயம் அடைந்த அரவிந்தை அப்பகுதி மக்கள் மீட்டு, பெத்தநாயக் கன்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவரும் இறந்தார்.
இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் கூறும்போது, "மாணவர்கள் இருவரும் cellphone game விளையாடியபடி சென்றுள்ளனர்அப்போது ரயிலில் அடிபட்டது, முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்தது என்றனர்.
செல்போனால் இருவரின் உயிர் பறிபோனதற்கு காரணம் அவர்களின் கவன குறைவு மற்றும் அவர்களது பெற்றோர்களே காரணம். படிக்கும் வயதில் செல்போன் வாங்கி தந்தது இப்போது அவர்களின் உயிர் போக காரணமாகிவிட்டது.
__________________________________________
மற்றொரு சம்பவம்
காணமல் போன பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு
ஓசூர் அருகே, வீட்டு முன் விளையாடிய மாணவன் காணமல்போன நிலையில், விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப் பட்டான்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலுார் அருகே சூடாபுரத்தை சேர்ந்த விவசாயி ஆகாஷ், 27; இவரது மகன் சதீஷ், 5 வயது சிறுவன் LKG, படித்து வந்தான் கடந்த, 15ம் தேதி மாலை, வீட்டு முன் விளையாடி கொண்டிருந்த மாணவன் திடீரென மாயமானான். அதிர்ச்சியடைந்த ஆகாஷ், எங்கு தேடியும் மாணவன் கிடைக்கவில்லை.
அப்பகுதியிலுள்ள ஆகாஷுக்கு சொந்தமான கிணற்றில், சதீஷ் நேற்று காலை சட்லமாக மிதந்தான். பாகலுார் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர் இதில் கிணற்றின் அருகே சென்றபோது, சதீஷ் தவறி விழுந்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அதேசமயம் ஆகாஷுக்கும், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த உறவினர்களுக்கும் சொத்து பிரச்னை உள்ளது. மாணவன் மாயமானபோது அவர்கள் சூடாபுரத்தில் இருந்துள்ளனர். இதனால் மாணவன் சாவில் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாகலுார் போலீசார், சிலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.