கரூர்-சேங்கல் பகுதிகளில் சம்பா சாகுபடிபணியில் விவசாயிகள் தீவிரம்

 கரூர் அருகே  உள்ள சேங்கல் பகுதியில் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

கரூர்-சேங்கல் பகுதிகளில்  சம்பா சாகுபடிபணியில் விவசாயிகள் தீவிரம்

கரூர் அருகே சம்பா சாகுபடி  பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சம்பா சாகுபடி

கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது இதனை அடுத்து அப்பகுதில் உள்ள ஏரி,குளங்கள் நிரம்பியது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தன.இதனை தொடர்ந்து மாயனூர்,சேங்கல், கட்டளை, தோகை மலை, சுக்காலியூர் உள்பட அனைத்து பகுதிகளிலும்  சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இப்பணிகளில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கரூர் அருகே உள்ள சேங்கல, சின்ன சேங்கல்  மற்றும் - அதன் சுற்று வட்டாரபகுதிகளில் 100-க்கும் மேற் பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

கரூர்-சேங்கல் பகுதிகளில்  சம்பா சாகுபடிபணியில் விவசாயிகள் தீவிரம்

இந்த பகுதிகளில் நெற்பயிர் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பின்னர் சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கிணற்று பாசனம் மூலம் வரும் தண்ணீர் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது.

உழவுப்பணி

அமராவதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் கடந்த செப்டம்பர் மாதம் விவசாய தேவைகளுக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் கரூர் மாவட் டத்தில் பெய்தகனமழை காரணமாக அமராவதி ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மாயனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கரூர்-சேங்கல் பகுதிகளில்  சம்பா சாகுபடிபணியில் விவசாயிகள் தீவிரம்


அந்தவகையில் சம்பா சாகுபடிக்காக டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணி, வரப்பு சீர் செய்யும் பணிகளில் விவ சாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நெற்பயிர்கள் நடவு செய்யும் பணி தொடங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

புதியது பழையவை

نموذج الاتصال