கரூர்-சேங்கல் வீட்டில் நடந்த கொள்ளை: 6 பேர் கைது

 கரூர்-சேங்கல் வீட்டில் நடந்த கொள்ளை: 6 பேர் கைது

கரூர்-சேங்கல் வீட்டில் நடந்த கொள்ளை: 6 பேர் கைது

கரூர் மாவட்டம் மாயனூர் அருகே உள்ள சேங்கலில், வீட்டுக்குள் புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற, ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், மாயனுார் அருகே உள்ள சேங்கல் மேல்பண்ணைகளம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கடந்த மாதம், 25ல் வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த முகமூடிதிருடர்கள்  ரவிச்சந்திரன் அவரது குடும்பத்தினரை மிரட்டி, தங்க நகைகளை கொள்ளையடித்து எடுத்து சென்றனர். இதுகுறித்து, மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தநிலையில்

கைது
கரூர்-சேங்கல் வீட்டில் நடந்த கொள்ளை: 6 பேர் கைது

ரவிச்சந்திரன் வீட்டில் திருடியதாக சிவகங்கை மாவட்டம், விக்னேஷ்வரன், தினேஷ் வேலன், முத்து பாண்டி, பரமக்குடியை சேர்ந்த வெங்கடேஷ், பல்லடத்தை சேர்ந்த விக்கி,கரூரை சேர்ந்த அருண்குமார் ஆகிய, ஆறு பேரை மாயனுார் போலீசார், நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோரம் வாகனங்கள் நிறுத்தம் போக்குவரத்து நெரிசலால் அவதி

கரூர், தான்தோன்றிமலை பகுதிகளில் சாலையின் இரு புறமும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கரூர்-சேங்கல் வீட்டில் நடந்த கொள்ளை: 6 பேர் கைது


கரூரில் இருந்து, தான்தோன்றிமலை சுங்ககேட் சாலை வழியாக அரசு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம், திருச்சி பைபாஸ் சாலை, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பிற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இதில், மில்கேட்பகுதியில் இருந்து பழைய SP அலுவலகம் வரை, சாலையின் இரண்டு பக்கமும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இங்கு, சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. சுங்ககேட்டில் இருந்து வெங்ககல்பட்டி வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில், வடிகால் கட்டப்பட்டுள்ளது. மேலும், பாதசாரிகள் செல்ல வசதியாக சாலையோரம் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதில், சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.

வர்த்தக நிறுவனங்கள், வங்கிகளுக்கு தினமும் வாடிக்கையாளர்கள் செல்கின்றனர். இவர்கள், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு, நீண்ட நேரம் கழித்துதான் எடுத்து செல்கின்றனர். சாலையின் இரு பகுதிகளில், எல்லையை குறிக்கும் வகையில் வெள்ளை கோடு வரையப்பட்டுள்ளது. அந்த கோட்டையும் ஆக்கிரமித்து,வாகனங்கள் வரிசைகட்டி நிறுத்தப்படுகிறது. மேலும், பொது மக்கள் நடந்து செல்ல வசதியாக அமைக்கப்பட்டுள்ள பிளாட் பாரத்தில், சரக்கு வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, சாலையோரம் சரக்கு வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதியது பழையவை

نموذج الاتصال