மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் ரூ.17 லட்சம் முறைகேடு
சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை
புதுக்கோட்டை அருகே மகப்பேறு நிதி உதவித் திட்டத்தில் ரூ.17 லட்சம் முறைகேடு தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகப்பேறு நிதியுதவி திட்டம்
தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் நிதி உதவி மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் தவணைகளாக ரூ.14 ஆயிரம் நிதி உதவியும், ரூ.4 ஆயிரம் ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இதனை பெற அரசின் வழிகாட்டு முறைகள் பல உள்ளன. கர்ப்பிணிகள் கர்ப்பமுற்ற 12 வாரத்திற்குள் கிராம, நகர சுகாதார செவிலியரிடம் பதிவு செய்து எண் பெற்றுக்கொள்ளவேண்டும்
அரசு மருத்துவமனைகளில் தொடர்பரிசோதனை சிகிச்சை, பிரசவம் மேற்கொள்ளுதல், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இத்திட்டத்தில் மாநில அரசின் நிதி அரசின் கருவூலம் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
ரூ.17 லட்சம் முறைகேடு
இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் வரை இத்திட்டத்தில் நிதி உதவி வழங்கப்பட்டதை தணிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் இத்திட்டத்தில் நிதி உதவி வழங்கப்பட்டதை தணிக்கை மேற்கொண்டனர்.
இதில் கடியாப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பயனாளிளுக்கு நிதி உதவி அதிகமாக வழங்கப்பட்டிருந்தது சந்தே கத்தை ஏற்படுத்தியது. மேலும் ரூ.17 லட்சம் வரை முறைகேடு நடத்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டுசென்றனர்.
தணிக்கை குழு சோதனை
இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து துறையை சேர்ந்த தணிக்கை குழு அறிகாரிகள் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை வந்தனர். அவர்கள் இத்திட்டத்தில் நிதி உதவி வழங்கபட்டவிவரங்களை தணிக்கை செய்து வருகின்றனர். இதுகுறித்து புதுக்கோட்டை
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கடியாப்பட்டி வட்டார ஆரம்பசுகாதார நிலையத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் ரூ.17 லட்சம் வரை முறைகேடு நடத்திருப்பது தெரிந்துள்ளது. ஒரே நபரின் வங்கி கணக்கு எண்கள் மற்றும் பயனாளிகள் அல்லாதவர்களின் வங்கி கணக்கு எண்களுக்கு இத்தொகை அரசின் கருவூலம் மூலம் பணம் சென்றுள்ளது. இந்த முறைகேட்டில் ஊழியர்கள் ஈபட்டு இருக்கலாம்.
விசாரணை
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் இப்பிரிவு அலுவலர்கள் தான் பயனர்ளிகளின் வங்கி கணக்கு எண் விவரங்களை கணினியில் பதிவேற்றுதல், பணம் சென்றதை கண்காணித்தல் பணியை மேற்கொள்கின்றனர். இதனால் அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. கருவூலத்திலும் விசாரணை நடத்தி தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
உண்மையான பயனாளிக்ளுக்கு இத்திட்டத்தில் நிதி வழங்கவில்லை என இது வரை புகார் எதுவும் வரவில்லை, தணிக்கை குழுவின் சோதனை முடித்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பணத்தை திரும்ப பெறவும் துறைரீதியாகவும், சட்டப்பூவமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
இவ்வாறு அவர் கூறினார் மகப்பேறு நிதி உதவித்திட் டத்தில் முறைகேடு அறிந்து சம்பவம் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.