திருச்சி காவிரி ஆற்றில் ராக்கெட் குண்டு சிக்கியதால் பரபரப்பு
ஜீயபுரம், திருச்சி அருகே காவிரி ஆற்றில் மீண்டும் ராக் கெட்குண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராக்கெட் குண்டு
திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே அந்தநல்லூர் சிவன் கோவில் எதிர்ப்புறம் உள்ள காவிரி ஆற்று படித்துறையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 30- ந்தேதி மாலை குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, படித்துறை பாறைகளுக்கு இடையே இரும்பு போன்ற ஒருபொருள் தென்பட்டது. இதையடுத்து அதனை எடுத்து பார்த்த போது, ராக்கெட் குண்டு என தெரியவந்தது. உடனே அவர்கள் ஜீயபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார், அதனை மீட்டு திருச்சி ராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அவர்கள் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது அது 3 கிலோ 800 கிராம் எடையும், 60 செ.மீ. நீளமும் இருந்தது. பின்னர் முக்கொம்பு கொள்ளிட பாலத்தில் இருந்து சுமார் 1 கி.மீ.தூரம் உள்ள வனப்பகுதிக்கு ராக்கெட் குண்டை கொண்டு சென்று வெடிக்க வைத்து, அதனை அழித்தனர்.
அந்த பகுதியில் மீண்டும் ஒரு ராக்கெட்குண்டு கண்டெடுக்கப்பட்டது. இது அந்தநல்லூர் சிவன் கோவில் எதிர்புற முள்ளபடித்துறை படிக்கட்டில் கிடந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் குண்டும், தற்போது கண்டெடுக்கப் பட்ட ராக்கெட் குண்டும் ஒரே அளவில் இருந்தது தெரியவந்தது.
பரபரப்பு
பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ராக்கெட் குண்டில் கைரேகைகள் ஏதும் உள்ளதா என்று சோதனை செய்தனர்
அந்தநல்லூர் பகுதி வருவாய் அதிகாரி நிலோபர் நிஷா, அந்தநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி விக்னேஷ் ஆகியோரும் நேரில் வந்து பார்வையிட்டனர்.
பின்னர் ஜீயபுரம் போலீசார் ராக்கெட் குண்டை கைப்பற்றி அதனை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ள னர். ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மீண்டும் ராக்கெட் குண்டு
கிடந்ததால் யாராவது இங்கு கொண்டு, வந்து போட்டுவிட்டு சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போல் வேறு ஏதாவது கிடைத்தால் பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.