கரூர் அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை இருவர் கைது

 கரூர் அருகே தீபாவளியன்று கோஷ்டி மோதல் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை 2 பேர் கைது
கரூர் அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை இருவர் கைது

கரூர் அருகே தீபாவளியன்று நடந்த கோஷ்டி மோதலில் வாலிபர் கத்தியால் குத்திக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது.


ஜவுளி நிறுவன ஊழியர்


கரூர் மாவட்டம் வாங்கல் அருகே உள்ள கருப்பம்பா னையும் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகன் கதிரவன் (வயது 24). இவர் தளவாபாளையம் அருகே மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனது சகோதரி தீபா வீட்டில் தங்கி, கடந்த 6 மாதமாக ஜவுளி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் முத்தரையார் தெருவை சேர்ந்தவர் யோகேத்திரன் மகன் கீஷோத் (19), புகளூர் அருகே உள்ள வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணன் மகன் விஸ்வேஷ்வரன்.


இந்த நிலையில் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் கிஷோத் விஸ்வேஷ்வரன் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கில் மேட்டுப்பாளை யம் வழியாக அதிவேகமாகவும் சத்தம் போட்டுக்கொண்டும் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மேட்டுப்பாளையம் பகவதி அம்மன் கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கதிரவன், சிவதநேசன் ராகுல், நித்திஷ் ஆகிய 4 பேரையும் பார்த்து கிஷோத் மற்றும் விஸ்வேஷ்வரன் ஆகியோர் தகாத வார்த்தைகலால் திட்டி உள்ளனர்

கோஷ்டி மோதல்
கரூர் அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை இருவர் கைது

பின்னர் அங்கிருந்து 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக வேலாயுதம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர் இதனால் ஆத்திரம் அடைத்த கதிரவன், சிவநேசன், ராகுல், நித்தீஷ் ஆகிய 4 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் கிஷோத் விஸ்வேஷ்வரனை துரத்திக்கொண்டு சுமார் 10 கிலோமீட்டார் தூரம் பின்னா லேயே வேகமாக வந்து துரத்தி கொண்டிருந்தனர் அப்போது புகழிமலை திருமண மண்டபம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் 4 பேரும் சேர்ந்து கிஷோத் விஸ்வேஷ்வரனை மடக்கிப்பிடித்து திட்டி உள்ளனர் அப்போது அவர்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு, அடிதடியாக மாறியது.


கத்தியால் குத்திக்கொலை


இதில் ஆத்திரமடைந்த விஸ்வேஷ்வரன், கிஷோத் ஆகியோர் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கதிரவனின் மார்பில் குத்தியதாக கூறப்ப டுகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் சிவநேசன், ராகும் நித்திஷ் ஆகியோரையும் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.


இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த கதிரவனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு கதிரவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்தனர்

2 பேர் கைது
கரூர் அருகே வாலிபர் கத்தியால் குத்தி கொலை இருவர் கைது

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தகொலை குறித்து கதிரவனின் தாய் கோயிந்தி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் வழக்குப்பதிந்து, விஸ்வேஷ்வரன் மற்றும் கிஷோந் கைது செய்தார். பின்னர் அவர்களை கரூர் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.


புதியது பழையவை

نموذج الاتصال