ரூ800 கோடி மார்கெட்
தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த முறை 4 நாள் அரசு விடுமுறை என்பதால் மதுபான விற்பனை அதிகரிக்கும். கடந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாளும் தீபாவளி என்றும் இரண்டு நாளில் 467. 63 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையான, நிலையில் இந்த ஆண்டு அது 520 கோடியை தாண்டும். இந்த முறை தீபாவளியை முன்னிட்டு 4 நாள் விடுமுறை வருவதால் அந்த 4 நாட்களில் மதுபான விற்பனை 800 கோடி ரூபாயை தாண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 500 டாஸ்மாக் கடைகளை மூடிய நிலையில், இப்போது மாநிலம் முழுவதும் 4829 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் மது போதைக்கு அடிமையாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், என்று ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளை வலியுறுத்தி வருகின்றன, கோர்ட்டும் படிப்படியாவது டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாட்களில் நாள் ஒன்றுக்கு சராசரி 95 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகின்றன தீபாவளி பொங்கல் புத்தாண்டு ஆகிய முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் விற்பனை நாள் ஒன்றுக்கு ரூ240 கோடி முதல் ரூ290 கோடி வரை செல்லும் தீபாவளி பண்டிகையில் தீபாவளிக்கு முதல் நாளும் தீபாவளி அன்றும் மதுபானம் விற்பனை அதிகரிக்கும், இந்த முறை வரும் 31ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது,அதனால் தீபாவளி அன்றும் அதற்கு முதல் நாளும் இந்த மதுபான விற்பனை ரூ520 கோடி ரூபாயை தாண்டும் அடுத்த நவம்பர் 1ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, நவம்பர் 2, 3 சனி ஞாயிறு என்பதால் தீபாவளிக்கு 4 நாட்கள் சேர்ந்தார் போல் விடுமுறை வருகிறது இந்த நான்கு நாட்களிலும் மதுபானம் மொத்தமாக 800 கோடி வரை விற்பனையாகும் என்று நம்புவதாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றன.
ஐம்பதாயிரம் கோடி
2003இல் டாஸ்மாக் வருவாய் வெறும் ₹3,639 கோடியாக மட்டுமே இருந்தது 21 ஆண்டுகளில் அதன் வருவாய் 20 மடங்கு வரை உயர்ந்துள்ளது 2018 இல் ரூ26 ஆயிரத்து 797 கோடி ஆக இருந்த வருவாய் கடந்த ஆண்டில் 45 ஆயிரம் கோடியாக உயர்ந்தது கடந்த ஆண்டு மதுபானங்கள் விலையும் ரூ 80 வரை உயர்த்தப்பட்டது அதை போல் உள்நாட்டில் தயாரிக்கப்படும், வெளிநாட்டு மற்றும் இதர மதுபானங்களின் 12 வகையை உயர்த்தியதால் சாதாரண மது வகைகள் ரூ250 முதல் அதிகபட்சம்ன ரூ500 வரையிலும், நடுத்தர மது வகைகள் ரூ300 இல் தொடங்கி ரூ600 வரையிலும், வெளிநாட்டு மதுபானங்கள் ரூ500 முதல் 1000 வரை கிடுகிடுவென உயர்த்தப்பட்டது, இதனால் இந்த முறை டாஸ்மாக் வருமானம் நடப்பாண்டில் ஐம்பதாயிரம் கோடி எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்கு மது பிரியர்கள் விஸ்கி பிராந்தி ரம் வேர்கா மற்றும் பீர் உள்ளிட்ட மதுபானங்களை அதிகம் வாங்குவார்கள், தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளி அன்று மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும் அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி மது பிரியர்களின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள எல்லா மதுக்கடைகளிலும் கூடுதல் மதுபானங்களை இருப்பு வைத்திருக்கும் படியும், கடைகள் தேவையான மதுபானங்களை டாஸ்மாக் குடோனில் இருந்து முன்கூட்டியே கடைகளுக்கு அனுப்ப டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதை சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முந்தைய சேல்ஸ் கடந்த முறை தீபாவளிக்கு முந்தைய நாளில் மதுரை மண்டலத்திலும் தீபாவளி அன்று திருச்சி மண்டலத்திலும் அதிகமாக மதுபானம் விற்பனை நடந்துள்ளது எனினும் இரண்டு நாட்களிலும் சேர்த்து மதுரையில் மட்டும் ரூ14 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ101 கோடிக்கு மது வற்பனை நடந்துள்ளது இந்த ஆண்டும் மதுரை மண்டலம் முதலிடத்தை தக்க வைக்குமா என்ற கேவலமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.