100ஆண்டு பழமை வாய்ந்த சித்தலவாய் ரயில்வே ஸ்டேஷன் மூடு விழா காண்கிறதா
காட்டு தீ போல் இந்த செய்தி பரவி வரும் நிலையில் தொடர்ந்து மேம்பாட்டு பணிகளை செய்து ரயில்வே ஸ்டேஷன் இயங்கச் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கிருஷ்ணராயபுரத்திற்கு சித்தலவாய் என்றும் பெயர், கிருஷ்ணா தேவராயர் ஆட்சி செய்ததால் கிருஷ்ணராயபுரம் இன்று பெயர் வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. இந்த சிறப்புமிக்க கிருஷ்ணராயபுரம் என்ற ஊர் தொகுதியின் தலைமை இடமாகவும் விளங்குகிறது. கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு ஊர் பெரிய நகரத்திற்கு இணையாக விளங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.
கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியாகவும், தாலுக்காகவும் உள்ளது அது மட்டுமின்றி யூனியன் அலுவலகம், கோர்ட்,அரசு மற்றும் தனியார் வங்கிகள், தோட்டக்கலைத்துறை அலுவலகம், ஆகியவை அமைந்துள்ளன தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றன.
தரைவழி போக்குவரத்திற்கு அச்சாரமாக இங்கே சித்தலவாய் பெயரில் ரயில்வே ஸ்டேஷன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இயங்கி வருகிறது. அன்றைய காலத்தில் இருந்து ஒரு லைன் இருப்புப் பாதை மட்டுமே உள்ளது இப்பகுதி வழியாக பாசன வாய்க்கால் செல்வதால் மற்றொரு இருப்புப் பாதை அமைக்கும் பணி பரிசீலனையில் இருந்தாலும் சவாலாக இருந்து வருகிறது. இப்போது சாதாரண ரயில்கள் மற்றும் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் நின்று சென்று வருகின்றன மேலும் முக்கிய ரயில்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து முன்பதிவு செய்து வருகின்றன. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது நல்ல முறையில் இயங்கி வரும் ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட உள்ளதான தகவல் கிருஷ்ணராயபுரம் பகுதியில் வேகமாக பரவி வருகிறது ரயில்வே ஸ்டேஷனை முடக்க கூடாது என்று சமீபத்தில் நடந்த கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது எங்கள் பேரூராட்சி எல்லையில் உள்ள சுற்றுலா ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது தினமும் கல்லூரி,பள்ளி மாணவர்கள் மற்றும் கரூர் வேலைக்கு செல்பவர்கள் ரயிலை பயன்படுத்தி வருகின்றன ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட்டால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் எனவே பொதுமக்களுக்கு பயனுள்ள இந்த ரயில்வே ஸ்டேஷனை தொடர்ந்து இயக்கச் செய்வதுடன் உயர்தர மேம்பாட்டுப் பணிகளை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றன. மேலும் சித்தலவாய் ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட உள்ளதாக ஒவ்வொரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை தகவல் வெளி வருகிறது சாதாரண டிக்கெட் முதல் முன்பதிவு மூலம் மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. கிருஷ்ணராயபுரம் மற்றும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் போக்குவரத்தை விரும்பி வருகின்றன சித்தலவாய் ரயில்வே ஸ்டேஷனை மூடக்கூடாது என்று பேரூராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை ரயில்வே அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் துணை முதல்வர் மின்துறை அமைச்சர் கரூர் எம்பி ஆகியோருக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வலியுறுத்த உள்ளோம். சித்தலவாய் ரயில்வே ஸ்டேஷனை மூடாமல் தொடர்ந்து மேம்பாட்டுப் பணிகளை செய்து அனைத்த ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நூறாண்டு கட்டடம்
சித்தலவாய் ரயில்வே ஸ்டேஷனில் நடந்து வரும் முன்பதிவு மையத்தை வேறு பகுதிக்கு மாற்ற மறைமுகமாக வேலைகள் நடப்பதாக தெரியவருகிறது அதேபோல் அருகில் உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் புதிதாக கட்டடம் அமைத்து மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன ஆனால் சித்தலவாய் ரயில்வே ஸ்டேஷன் மட்டும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில்தான் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது,இங்கு ரயில்வே பிளாட்பார்ம் பணிகள் தவிர எந்தவித மேம்பாட்டு பணிகளும் நடக்கவில்லை இந்நிலையில் ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட உள்ளதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது இந்த ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே ரயில்வே ஸ்டேஷன் தொடர்ந்து இயங்கச் செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றன சித்தளவாய் ரயில்வே ஸ்டேஷன் மூடப்படாமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.