10 ஆம் வகுப்பு தேர்வில் விடைத்தாள் சரிபார்க்காமல் அவராக மதிப்பெண்கள் வழங்கியதாக ராஜஸ்தான் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
ராஜஸ்தானில் 10ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் தேர்வு விடைத்தாள்களை பரிசீலனை அதாவது சரிபார்க்காமல் தன்னிச்சையாக மதிப்பெண்கள் வழங்கிய ஆசிரியை நிமிஷா ராணியை ராஜஸ்தான் கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளது.
ஜெய்ப்பூர்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்களை பரிசீலனை செய்யாமல் மாணவர்களுக்கு ஒழுங்கற்ற மதிப்பெண்கள் வழங்கிய ஆசிரியரை ராணியை ராஜஸ்தான் கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளதாக கல்வி துறை தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான விடைத்தாள்களை மதிப்பிடாமல் தன்னிச்சையாக மதிப்பெண்களை வழங்கியதற்காக மூத்த ஆசிரியை நிமிஷா ராணி உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை உறுதிப்படுத்தியது.
அஜ்மீர் மாவட்டம், பகவான் கஞ்சில் உள்ள மகாத்மா காந்தி அரசுப் பள்ளியில் உள்ள ராணி, விடைத்தாள்களை மதிப்பீடு செய்யத் தவறி, மொத்த மதிப்பெண்களை மட்டுமே பதிவு செய்தது, அவரின் பெரிய அலட்சியம் என கல்வித் துறை குற்றம் சாட்டியுள்ளது.
கல்வி அமைச்சர் மதன் திலாவரின் அறிவுறுத்தலின் பேரில், அவரின் மீதான துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, அவர் மீது சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.